திருமணமான 3 மாதத்தில் காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலைசெய்த கணவன்!

இந்தியாவில் திருமணமான 3 மாதத்தில் காதல் மனைவியை கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனேவை சேர்ந்த வைபவ் என்பவரும் பூஜா என்ற இளம்பெண்ணும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்தே புதுமணத்தம்பதி இடையே சிறு விடயங்களுக்கு கூட வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வைபவ் – பூஜா இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டது.

அப்போது மாமியார் கண் எதிரிலேயே பூஜா தனது கணவர் வைபவை இழிவுப்படுத்தும் வகையில் மிகவும் கீழ்த்தரமாக திட்டி பேசி மோசமாக நடந்திருக்கிறார்.

தனது தாய் முன்னால் தன்னை மனைவி இப்படி அசிங்கப்படுத்திவிட்டாளே என ஆத்திரமடைந்த வைபவ் கண்ணிமைக்கும் நேரத்தில் பூஜாவை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் அங்கு வந்து பூஜாவின் சடலத்தை கைப்பற்றிவிட்டு வைபவை கைது செய்தனர்.

அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.