யாழில். தடுப்பூசி வழங்கும் பணிகளை நேரில் பார்வையிட்டார் நாமல் ராஜபக்ஷ!

யாழ். மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி வழங்கும் பணிகளை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேரில் பார்வையிட்டார்.

யாழ். மாவட்டத்திலுள்ள நல்லூர், கைதடி, கோப்பாய், பருத்தித்துறை மற்றும் கரவெட்டி போன்ற பகுதிகளில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டார்.

இதன்போது யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.