யாழில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நிலையங்களை அதிகரிக்குமாறு அறிவுறுத்தல்!

யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் நிலையங்களை அதிகரிக்குமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மாவட்ட சுகாதார தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இன்று (30) யாழ்ப்பாணத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட அவர் இதனை குறிப்பிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாத்திரமின்றி கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் அடுத்த கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.