இத்தாலியில் இலங்கை பெண்ணை நடுவீதியில் குத்திக் கொன்ற கணவன்!

இத்தாலியின் ரோம் நகரில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக,
கணவரால் வீதியில் குத்திக் கொல்லப்பட்டார்.

இறந்தவர் 40 வயதுடைய இலங்கை பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

29 ஆம் திகதி மதியம் 2.30 மணியளவில் ரோம் போர்ச்சுவென்ஸ் பகுதியில் வீதியில் இந்த சம்பவம்
நடந்தது.

தம்பதியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, நடுவீதியில் வைத்து கத்தியால் மனைவியை அவர்
குத்தியுள்ளார. உடனடியாக, நோயாளர் காவுவண்டி மூலம் ரோம் புனித காமிலோ
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு, அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அவர்
பல முறை குத்தப்பட்டு வயிற்றில் இரண்டு குத்துக்காயங்கள் காணப்பட்டன. சிகிச்சை பயனின்றி
அவர் இறந்தார்.

பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, மனைவியை குத்திய கத்தியுடன் கணவர் வீதியிலேயே
நின்றுள்ளார்.

49 வயதான கணவரும் இலங்கையர் ஆவார். அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.