யாழில் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்ட வாகனம் – 8 பேரின் நிலை?

யாழ்.எழுதுமட்டுவாள் பகுதியில் ஏ-9 வீதியால் பயணித்த கன்டர் வாகனம் ஒன்றே வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இந் நிலையில் சம்பவத்தில் வாகனத்தில் பயணித்த 8 பேர் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.