கர்நாடக மாநிலத்தில் 35 பேர் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழப்பு!

கர்நாடக மாநிலத்தில் இதுவரை 35 பேர் கறுப்பு பூஞ்சை நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘கர்நாடகத்தில் கறுப்பு பூஞ்சை நோய் காரணமாக இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து ஆய்சு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். இந்த நோய் பாதித்தவர்களுக்கு அரசு வைத்தியசாலைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கர்நாடக அரசு நேரடியாக ரெம்டெசிவிர் மருந்தை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 20 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.