நட்சத்திர ஹோட்டலில் பிறந்நாள் கொண்டாடிய குற்றச்சாட்டில் பியூமி ஹன்சமாலி கைது!

முதலாம் இணைப்பு

நட்சத்திர ஹோட்டலில் பிறந்நாள் கொண்டாடிய குற்றச்சாட்டில் பிரபல அழகு கலை நிபுணரான சந்திம ஜயசிங்க மற்றும் பியூமி ஹன்சமாலி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு – கோட்டை பொலிஸாரினால் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, கொழும்பிலுள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இவர்கள் பிறந்தநாள் நிகழ்வை நடத்தியதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதனையடுத்து கொழும்பு புதுகடை நீதவான் நீதிமன்றில் இருவரும் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, 10 லட்சம் ரூபா சரீர பிணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரண்டாம் இணைப்பு

பிரபல அழகு கலை நிபுணரான சந்திம ஜயசிங்க மற்றும் நடிகை பியூமி ஹன்சமாலி ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு புதுகடை நீதவான் நீதிமன்றில் இருவரும் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, 10 லட்சம் ரூபா விதமான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்