ஜூன் 7ஆம் திகதிக்குப் பிறகு பயணத் தடை நீட்டிக்கப்படுமா? இராணுவத் தளபதியின் அறிவிப்பு

ஜூன் 7ஆம் திகதிக்குப் பிறகு பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய் பரவாமல் தடுக்க மே 21 முதல் முழு நாட்டுக்கும் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும், அதன் பின்னர் கட்டுப்பாடுகளை நீட்டிக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

பயண வரம்பை நீட்டிப்பது குறித்து பல்வேறு வதந்ததிகள் சமூக மட்டத்திலும் ஊடகங்கள் வாயிலாகவும் பரவிவருகின்றது. பயணத்தடை தொடர்ந்து நீடிப்பது தொடர்பான முடிவு ஜனாதிபதி மற்றும் சுகாதார அதிகாரிகள் அடங்கிய குழுவனால் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.