கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு இன்று முதல்!

இலங்கையில் கொரோனாவின் 2-ம் அலை தீவிரமடைந்து வந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக இலங்கை அரசாங்கம் வருகின்ற 7-ம் திகதிவரை பயணத்தடை விதித்துள்ளது.

இந்த பயணத்தடையால் அன்றாடம் வேலை செய்து குடும்பங்களை நடத்திவந்த பல ஏழை கூலித்தொழிலாளர்கள், இன்று ஒரு வேளை உணவிற்கு போராடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று திங்கள் கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.