இன்றைய தினம் 2 ஆயிரத்து 882 பேருக்கு கொவிட் தொற்று!

இலங்கையில் மேலும் ஆயிரத்து 351 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இன்றைய தினம் 2 ஆயிரத்து 882 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 186,334 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 150,000 ஐக் கடந்தது.

அத்தோடு இன்று மேலும் ஆயிரத்து 915 பேர் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்து சிகிச்சை மையங்களிலிருந்து வெளியேறியுள்ளனர்.

மேலும் கொரோனா தொற்றுநோய் தடுப்புப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட நாளாந்த அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருந்தவர்களில், 151,740 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.