நானுஓயா வீதியில் விபத்து-சிறார் உட்பட நால்வர் காயம்!

நுவரெலியா – நானுஓயா பிரதான வீதியில் ஸ்கிராப் தோட்டத்துக்கு அருகாமையில் இன்று நண்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவர் ஒருவர் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா நகரிலிருந்து நானுஓயா வழியாக சென்ற நுவரெலியா மாநகரசபைக்குரிய குப்பை அகற்றும் வாகனமும், நானுஓயா பகுதியிலிருந்து நுவரெலியாவை நோக்கிச்சென்ற சென்ற ஆட்டோவும் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஆட்டோவின் பயணித்த சிறுவர் உட்பட நால்வரே காயமடைந்துள்ளனர். இதில் ஆட்டோ ஓட்டுநருக்கு கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இவ்விபத்து தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.