நேற்றையதினம் யாழில் 75 புதிய தொற்றாளர்கள்!

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாழ். மாவட்டத்தில் 36 பேர் உட்பட வடக்கில் மேலும் 75 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் பல பாகங்களில் இருந்து பெறப்பட்டிருந்த 691 பேரின் மாதிரிகள் இன்று (மே-31) யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் இவ்வாறு 75 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தரப்பில் இருந்து அருவிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் – 36 பேர்

மன்னார் மாவட்டத்தில் – 14 பேர்

வவுனியா மாவட்டத்தில் – 11 பேர்

கிளிநொச்சி மாவட்டத்தில் – 08 பேர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் – 06 பேர்

இவ்வாறு 75 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.