நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அவரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த நபரை பொலிஸார் தேடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.