பயணத்தடையை மீறி நினைவுகூர்ந்தால் கைது; யாழ். மாநகர முதல்வருக்கு எச்சரிக்கை

யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நூலகம் எரிக்கப்பட்ட நினைவு நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் நூலகத்தில் இடம்பெற இருந்த நிலையில், குறித்த பகுதி பொலிஸாரின் கண்காணிப்பு வலயத்தினுள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நூலகம் எரிக்கப்பட்ட நினைவுநாள் நிகழ்வுகள் இன்றையதினம் யாழ். மாநகர சபையினரின் ஏற்பாட்டில் பொது நூலகத்தில் இடம்பெற இருந்தது.

யாழ். மாநகர முதல்வர் இன்று காலை 9.30 மணியளவில் சுடரேற்றி நினைவு நிகழ்வை நடத்தவிருந்த வேளை, யாழ்ப்பாணம் பொலிஸார் உள்நுழைய விடாது முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

பயணத்தடையை மீறி நினைவுகூர்ந்தால் கைது செய்யப்படுவீர்கள் என யாழ். மாநகர முதல்வருக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்சரித்துள்ளார்.