யாழில் நாளை முதல் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு!

யாழ்.மாவட்டத்தில் இடர்கால கொடுப்பனவு 5 ஆயிரம் ரூபாய் நாளை முதல் வழங்கப்படும் என மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியிருக்கின்றார். யாழ்.மாவட்ட செயலகத்தில் ஊடகங்களை சந்தித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், இடர் காலத்தில் அரசினால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு நாளையிலிருந்து யாழ் மாவட்டத்தில் வழங்கப்படவுள்ள நிலையில் அதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் சுமார் 75,000 குடும்பங்களுக்கு அதாவது சமுர்த்திபெற்று வருகின்ற குடும்பங்களுக்கும், வருமானம் குறைந்த 38 ஆயிரம் குடும்பங்கள் உட்பட மொத்தமாக ஒரு லட்சத்து 52 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

தற்போது பயணத் தடை அமுலில் உள்ளதன் காரணமாக கடந்த காலங்களைப் போன்று அந்தந்த பகுதி அரச உத்தியோகத்தர்களினால் வீடுகளுக்குச் சென்று கொடுப்பினை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்படுகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.