தொற்று உறுதியாகி 10 நாட்களுக்குள் அறிகுறிகள் இல்லாதவர்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்படுவர்!

கொரோனா நோயாளராக அடையாளம் காணப்பட்டு, 5, 6 நாட்களின் பின்னர், நோய் அறிகுறிகள் இல்லாதிருக்கும் ஒருவரால் கொவிட் வைரஸை பரப்ப முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே, கொவிட் தொற்றுறுதியாகி, 10 நாட்களுக்குள் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்கள் பரிசோதனையின்றியே, சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

அதன்பின்னர் அவர்கள் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

அந்த 14 நாட்களுக்குள் அல்லது அதற்குப் பின்னர், பரிசீலனை மேற்கொள்ளப்படுமாக இருந்தால், கொரோனா வைரஸின் இறந்த கலங்கள், அவரின் உடலில் இருப்பதால், அவர் நோயாளி என அடையாளம் காட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

எனவே, இந்தக் காலப்பகுதியில் பி.சி.ஆர் பரிசோதனை செய்வது அர்த்தமற்றதாகும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.