இந்தியாவின் தற்போதைய கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது குறைவடைந்து செல்கின்ற நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 228 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இனங்காணப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 83 இலட்சத்து 6 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் 2 கோடியே 61 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் 18 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரம் 3 ஆயிரத்து 205 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 35 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் இன்று 14,000 பேர் வரை தடுப்பூசி பெற்றனர்!
Next articleஇலங்கையில் பதிவுத் திருமணங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு!