அடையாளம் காணப்படாத நோயாளர்கள் 8000 பேர் சமூகத்தில் நடமாடுகின்றனர்- அரசமருத்து அதிகாரிகள் சங்கம்

சமூகத்தில் சுமார் 8000 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளனர் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் பிரசாத்கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.
இது மிகவும் நெருக்கடியான நிலைமை இதற்கு தீர்வை காணவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
33,000 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் 17502 பேர் அரசமருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுகின்றனர் ஏனைய 6800 பேர் பாதுகாப்பு பிரிவினரினால் நடத்தப்படும் மருத்துவ நிலையங்களில் கண்காணிப்பின் கீழ்வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையையும் நாட்டில் உள்ள நோயாளர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பார்க்கும்போது 8000 நோயாளர்கள் இடைவெளி காணப்படுகின்றது என பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மருத்துவமனைகளில் நோயாளர்களிற்கான படுக்கை வசதிகளை அதிகரிக்க முயல்கின்றது எனினும் இது தற்போதைய நிலைமையை கட்டுப்படுத்த உதவாது எனவும் தெரிவித்துள்ள பிரசாத்கொலம்பகே மருத்துவ வசதிகள் பற்றாக்குறையாக உள்ளமையே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.