யாழ்.மாவட்டத்தில் 18 சிறுவர்கள் உட்பட 57 பேருக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று!

யாழ்.மாவட்டத்தில் 18 சிறுவர்கள் உட்பட 57 பேருக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் மேற்படி 57 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனாத் தொற்றுக்குள்ளான 23 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதில் 08 சிறார்களும் உள்ளடங்குவதாகவும் தெரியவந்துள்ளது. 01, 06, 06, 10, 15, 16 ஆகிய வயதுகளை உடைய சிறுமிகளும், 02, 10 வயதுகளையுடைய சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

இவர்களை விடவும் யாழ்.போதனா வைத்தியசாலையில் 06 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 சிறார்கள் உட்பட்ட 28 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது