பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையிலும் கொழும்பில் கடும் வாகன நெரிசல்

கொழும்பின் பல பிரதேசங்களில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு வாகனம் பலமுறை சோதனைக்கு உள்ளாவதை தவிர்க்கும் நோக்கில், கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நடைமுறைகள் இன்று (புதன்கிழமை) காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாகவே இவ்வாறு பல இடங்களில் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.