சீனாவில் பறவைகளிடம் இருந்து H10N3 வைரஸ் மூலம் பறவை காய்ச்சல் பரவியது!

சீனாவில் பறவைகளிடம் இருந்து H10N3 வைரஸ் மூலம் பறவை காய்ச்சல் ஏற்பட்ட முதலாவது நபரின் விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜென்ஜியாங்க் நகரில் 41 வயதான ஆண் ஒருவருக்கு பறவையிடம் இருந்து இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது.

இதற்கு முன் வேறு எந்த நாட்டிலும் இது போன்ற வைரஸ் பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக தகவல் வெளியாகவில்லை

இந்நிலையில் இது அதிக எண்ணிக்கையில் மனிதர்களிடம் தொற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் சீனா தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட நபரிடம் பரவிய வைரஸின் மரபியல் கூறுகளை ஆராய்ந்த சீன மருத்துவர்கள் பறவை காய்ச்ல் என்பதை உறுதி செய்துள்ள நிலையில் அவருடன் தொடர்புடையவர்களை கண்காணித்து வருகின்றனர்.