யாழ் மாதகல் கடற்பகுதி முற்றுகையில் 110 கிலோ கஞ்சா மீட்பு!

யாழ்.மாதகல் கடற்பகுதியில் இன்று கடற்படையினர் நடத்திய அதிரடி முற்றுகை
நடவடிக்கையின்போது சுமார் 110 கிலோ கேரள கஞ்சாவுடன் கடத்திவந்த நபரும் கைது
செய்யப்பட்டிருக்கின்றார்.

குறித்த சம்பவம் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. கடற்படையினர் மேற்கொண்ட
சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே

குறித்த நபர் கஞ்சாப் பொதிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்
கடற்படையினரும் இளவாலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.