நீர்கொழும்பு முதல் பானந்துறை வரையிலான கடற்பரப்பில் மீன் பிடிக்க தற்காலிக தடை!

நீர்கொழும்பு முதல் பானந்துறை வரையிலான கடற்பரப்பில் மீன் பிடிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக மீன்பிடித் துறை அறிவித்துள்ளது.

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு வழியாக கப்பல்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் காஞ்சனா விஜசேகர தெரிவித்தார்.

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் கடலில் மூழ்கி வருவதால் மீன் பிடிப்பதற்கு இவ்வாறு தற்காலிக தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் நீர்கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பாதுகாக்க அவசரகால தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகஅவர் மேலும் தெரிவித்தார்