இன்று புதன்கிழமை மட்டும் 2568 பேருக்கு கொரோனா தொற்று!

அவிசாவளைக்கு அருகிலுள்ள பாதுக்க சுகாதார பிரிவுக்குள் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 31ஆம் திகதி அங்கு 170 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.

அவர்களில் தற்போது 114 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதேவேளை இன்று புதன்கிழமை மட்டும் 2568 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்