நாட்டில் மேலும் ஒரு கர்ப்பவதி பெண் கொரோனா தொற்றினால் மரணம்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பவதி பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் 7வது கர்ப்பவதி பெண் உயிரிழப்பு இதுவாகும். இது குறித்து சுகாதார அமைச்சு கூறியுள்ளதாவது,

களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த கர்ப்பவதி பெண் நேற்றய தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளது.