அத்தியவசிய தேவைகளுக்காக பயணிக்கும் வாகனங்களுக்கு இன்று வேறு நிறத்தில் ஸ்டிக்கர்!

அத்தியவசிய தேவைகளுக்காக பயணிக்கும் வாகனங்களை இனங்கண்டு கொள்வதற்காக பொலிஸாரினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் முறை இன்றும் (03) நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நேற்றைய தினம் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் ஊடாக இன்று பயணிக்க முடியாது எனவும் இன்று வேறு நிறத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்படும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பிற்குள் நுழையும் 52 இடங்களில் இவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.