யாழில் அதிகரித்த திருட்டை தடுக்க பொலிசார் சுற்றுக்காவலில் களமிறக்கம்!

யாழ்ப்பாண குடாநாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிசார் பாதுகாப்பு தரப்பினர் திருட்டினை கட்டுப்படுத்த பொலிஸார் இன்று இரவு முதல் சுற்றுக்காவல் நடவடிக்கையினை முனடனெடுத்துள்ளனர்.


யாழ்ப்பாண பொலிஸ் நிலைய மோட்டார் சைக்கிள் அணியினர் இரவு வேளைகளில் வீதிகளில் சந்தேகத்திற்கிடமாக பயணிப்போரை சோதனையிட் டதுடன் பயணிக்கும் வாகனங்களையும் சோதனை இடம் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது


அத்தியாவசிய சேவை தவிர்ந்து தேவையற்ற விதத்தில் வீதியில் பயணித்தவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்ட்டனர்.


அண்மைய நாட்களில் யாழ்ப்பாண குடாநாட்டில் மூடப்பட்டிருந்த கடைகள், பாடசாலைகள் ,தேவாலயங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.