மஹிந்த ராஜபக்ஸவின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.mahindarajapaksa.lk என்ற இணையத்தளம் ஹெக் (ஊடுறுவல்) செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த இணையத்தளம் நேற்று புதன்கிழமை ஹெக் செய்யப்பட்டதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவிக்கின்றது.

அத்தோடு மஹிந்த ராஜபக்ஸவின் இணையத்தள முகவரிக்குள் பிரவேசிக்கும் போது, வேறொரு முகவரிக்கு பிரவேசிக்கும் வகையில் URL Redirect செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு URL Redirect செய்யப்பட்டுள்ள இணையத்தளத்தின் BITCOIN தொடர்பான தகவல்களே காணப்பட்டதாக அந்த சங்கம் கூறுகின்றது.

எவ்வாறாயினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மீள வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.