எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டால் கட்டுப்படுத்த தயார்!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்படுமாயின் அதனை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

கப்பலில் 322 தொன் எண்ணெய் காணப்பட்ட போதிலும் தற்போது எண்ணெய் காணப்படுகின்றதா? என்பது தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை.

கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்படுமாயின், அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

சுழியோடிகளையும் இதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கப்பல் தீப்பற்றியதால் நாட்டிற்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீட்டை பெற்றுக் கொள்வதற்கு தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்க சிறப்பு குழுவொன்று செயற்பட்டு வருவதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சட்ட மா அதிபரின் தலைமையில் இந்த குழு செயற்படுகின்றது.

தற்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்தந்த அரச நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.