யாழ். இணுவில் கலாஜோதி கிராமம் முடக்கப்பட்டது!

யாழ். இணுவில் கலாஜோதி கிராமம் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய நேற்று இரவு முடக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து சுகாதாரத் தரப்பினரால் கிராமத்தை தனிமைப்படுத்துமாறு நேற்று யாழ். மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியிடம் பரிந்துரை செய்யப்பட்டது.

இதனடிப்படையில் நேற்று இரவு தொடக்கம் அமுலாகும் வகையில் இணுவில் கலாஜோதி J/190 கிராம அலுவலர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது.