கொழும்பு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகள்

கொழும்புக்கு அருகிலுள்ள மொரட்டுவ உயன – பொல்வத்த கடற்கரையில் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

நூற்றுக்கணக்கான ஆமைகள் இவ்வாறு இன்று அதிகாலை இறந்த நிலையில் கரையொதுங்கியிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அத்துடன் சில ஆமைகளின் உடல்களில் காயம் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.