நாட்டில் உப்பிற்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என உப்பு வாங்க முண்டியடித்த மக்கள்!

நாட்டில் உப்பிற்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என வெளியாகிய செய்தியை தொடர்ந்து மன்னாரில் உள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில் இன்று கறி உப்பினை கொள்வனவு செய்ய மக்கள் முண்டியடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் மக்களுக்கு தேவையான உப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் தீப்பிடித்த கப்பலினால் கடலில் இரசாயன பொருட்கள் கலந்துள்ளமையினால் நாட்டில் உப்பு தட்டுப்பாடு ஏற்படலாம் என செய்திகள் வெளி வந்துள்ளது.

இந்த நிலையில் மன்னாரில் இன்று காலை முதல் பொதி செய்யப்பட்ட அயடின் கலந்த உப்பு பக்கற்றுக்களை முண்டியடித்து கொள்வனவு செய்துள்ளனர்.

இதேவேளை மன்னார் மாவட்ட மக்களுக்கு தேவையான உப்பு போதிய அளவு உள்ளதாகவும் மக்கள் இவ்வாறு முண்டியடித்தக் கொண்டு உப்பினை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை இல்லை எனவும் தற்போது அதிக அளவு உப்பு கையிருப்பில் உள்ளதோடு, பெரும் போக உப்பு உற்பத்தியும் இடம் பெற்று வருவதாக மாந்தை உப்பு உற்பத்தி நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.