கூரிய ஆயுதத்துடன் வந்து 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு கோரிய பெண்ணால் பரபரப்பு!

காலி – ஹுங்கம பகுதியில் 5000 ரூபா நிவாரண கொடுப்பனவை பெறுவதற்காக கூரிய ஆயுதம் ஒன்றுடன் வந்து அதிகாரிகளின் சேவைக்கு இடையூறு ஏற்படுத்திய பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயரிடப்பட்டவர்களுக்கு மட்டுமே 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் தனது பெயரையும் இணைத்துக்கொள்ளுமாறு குறித்த பெண் கூரிய ஆயுதத்துடன் வருகை தந்து அதிகாரிகளை அச்சுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, சம்பவம் தொடர்பில் ஹுங்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.