மிக விரைவில் கோவிட் போன்ற இன்னொரு பேரழிவு உலகை உலுக்கும் – எச்சரிக்கும் ஆய்வறிக்கைகள்

சீனாவில் வெளவால்களின் குகைகளுக்குள் விஞ்ஞானிகள் அத்துமீறியுள்ள நிலையில், மிக விரைவில் கோவிட் போன்ற இன்னொரு பேரழிவு உலகை உலுக்கும் என ஆய்வறிக்கைகள் எச்சரிக்கின்றன.

சீனாவில் அச்சுறுத்தும் வகையில் பல பகுதிகள் விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டு, அவை புதிய பேரழிவுக்கான அறிகுறிகள் என ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதனால், வெளவால்களிடம் இருந்து மிக எளிதாக மனிதரில் கிருமிகள் பரவும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.