ஆட்சி நடத்த முடியாது என்றால் ராஜினாமா செய்யுங்கள்!

சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக ஊழியர்களை அச்சுறுத்துவதற்காக அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு வருகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

மக்களை அச்சுறுத்தி, அடக்கும் நடவடிக்கைகைளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மக்களை கஷ்டத்திற்கு உள்ளாக்காது அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியாது என்றால், தயது செய்து ராஜினாமா செய்து விட்டு, நடத்த முடிந்தவர்களிடம் நாட்டை ஒப்படையுங்கள்.

அத்துடன் அரச ஊழியர்களை கஷ்டத்திற்கு உள்ளாக்கும் சர்வாதிகார வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதை நிறுத்துமாறும் பாலித ரங்கே பண்டார அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.