கொவிட்-19 தடுப்பூசிகளைக் கலந்து செலுத்தலாம்; கனேடிய மருத்துவர்கள்

கொவிட்-19 தடுப்பூசிகளைக் கலந்து செலுத்திக்கொள்ளலாம் என கனேடிய மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பில் தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் (Theresa Tam) மற்றும் துணை தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் ஹோவர்ட் என்ஜூ ஆகியோர் இணைந்து இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி கனடாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள அஸ்ட்ராஸெனெகா, ஃபைசர்- பயோஎன்டெக் அல்லது மொடர்னா கொவிட் -19 தடுப்பூசி அளவுகளை சில சூழ்நிலைகளில் மாறி மாறி இணைக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, தடுப்பூசிகளின் பரிமாற்றம் என்பது உங்கள் முதல் அளவுக்கு ஒரு தடுப்பூசி தயாரிப்பைப் பெறலாம் என்பதோடு, உங்கள் இரண்டு அளவுத் தடுப்பூசி தொடரை முடிக்க உங்கள் இரண்டாவது அளவுக்கு வேறு தடுப்பூசி தயாரிப்பைப் பாதுகாப்பாகப் பெறலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் ஸ்பெயினிலிருந்து புதிய ஆராய்ச்சி, கலத்தல் மற்றும் பொருத்தம் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleஆட்சி நடத்த முடியாது என்றால் ராஜினாமா செய்யுங்கள்!
Next articleசீனாவின் உயிரியல் “போர்” கொரோனா – .அமெரிக்கா வைத்தியரின் பரபரப்பு தகவல்