சீனாவின் உயிரியல் “போர்” கொரோனா – .அமெரிக்கா வைத்தியரின் பரபரப்பு தகவல்

உலகம் முழுதும், கொரோனா வைரஸால் எண்ணற்ற மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நம் அண்டை நாடான சீனாவில் உருவான இந்த வைரஸால், பெரும்பாலான நாடுகள், மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில், இந்த வைரஸ் குறித்து ஆய்வு செய்து வரும் அமெரிக்க வைத்தியரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான லாரன்ஸ் செல்லின், நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:கொரோனா வைரஸ் என்பது, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதை நான் முழுமையாக நம்புகிறேன்.

இது, ‘பயோவார்’ எனப்படும், உயிரியல் போர் ஆகும். இது சீனாவின் ஒரு திட்டமாகும். இதற்கு, சீன கம்யூனிஸ்ட் கட்சிதான் பொறுப்பு; அதன் ராணுவம் தான் முழு காரணம்.கொரோனா பரவலால், உலக நாடுகள் மோசமான பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், சீனா மட்டும் அமைதிகாத்து வருவது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தலாம்.

இதர நாடுகளைப் போல், சீனாவிலும், கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை, சீன கம்யூனிஸ்ட் கட்சி, தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எனினும், அதற்கான உரிய தகவல்களை நம்மால் பெற முடியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.