நதியில் விழுந்த தந்தை, சகோதரி; போராடி காப்பாற்றிய 7 வயது சிறுவன்

புளோரிடா: நதியில் விழுந்த தந்தை மற்றும் சகோதரியை காப்பாற்றுவதற்காக, ஒரு மணி நேரம் போராடி நீந்திச் சென்று உதவி கிடைக்க ஏற்பாடு செய்த, 7 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த ஸ்டீபன் பவுஸ்ட், தன், 7 வயது மகன், சேஸ் மற்றும் 4 வயது மகள் அபிகாயிலுடன், அங்குள்ள நதியில் மீன்பிடிக்க சென்றார்.திடீரென நதியின் வேகம் அதிகரித்தது. அதில், படகு கவிழ்ந்து மூவரும் தண்ணீரில் தத்தளித்தனர். சிறுமி மட்டும், பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்திருந்தார்.தந்தை மற்றும் சகோதரியை காப்பாற்ற வேண்டும் என்ற வேகத்தில், கரையை நோக்கி, சேஸ் நீச்சலடிக்க துவங்கினார்.

நதியின் அலையின் வேகத்துக்கு எதிராக செல்ல வேண்டியதால் கடுமையாக போராடினார்.ஒரு மணி நேரம் போராடி, கரையை அடைந்து, அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டான். அங்கிருந்தவர்கள் தந்தையையும், மகளையும் மீட்டனர். தீரத்துடன் செயல்பட்டு, தந்தை மற்றும் சகோதரியை காப்பாற்ற முயற்சி எடுத்த சிறுவன் சேஸ்க்கு, சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

Previous articleசீனாவின் உயிரியல் “போர்” கொரோனா – .அமெரிக்கா வைத்தியரின் பரபரப்பு தகவல்
Next articleபெற்றோருடன் சண்டையிட்டு ஒளிந்து கொள்வதற்கு நவீன சுரங்க பாதை உருவாக்கிய இளைஞர்