செம்மஞ்சள் நிறத்திலான இரண்டு வௌவால்கள் கண்டுபிடிப்பு!

செம்மஞ்சள் நிறத்திலான இரண்டு வௌவால்கள் மாத்தறை பிடபெத்தர, மஹபொதுவில பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

காணி ஒன்றின் தேயிலை மரம் ஒன்றில் இருந்து குறித்த வௌவால்கள் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏ.பீ.கே.பிரேமசிறி என்ற நபரினால் குறித்த இரண்டு செம்மஞ்சள் வௌவால்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

அந்துப்பூச்சி போன்ற ஒரு விலங்கினை கண்டேன். பறந்து சென்று தேயிலை மரத்தின் கிளையில் விழுந்தது. அருகில் சென்று பார்த்தேன். அப்பொழுதுதான் தெரிந்தது. அது வௌவால் என்று. முதலில் ஒரு வௌவாலைதான் பார்த்தேன். பின்னர்தான் மற்றைய வௌவாலை கண்டேன். என்றார்.

பிரேமசிறியால் குறித்த வௌவால்கள் தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்ததை தொடர்ந்து அரிய வகை விலங்காக கருதி அவற்றை தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.