யாழில் வீட்டு கிணற்றிலிருந்து வெடிக்காத நிலையில் பாரிய ஷெல்கள் மீட்பு!

யாழ்.அராலி தெற்கு பகுதியில் வீட்டு கிணறு ஒன்றிலிருந்து வெடிக்காத நிலையில் ஷெல்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த கிணற்றை வீட்டின் உரிமையாளர் சுத்தம் செய்தபோது கிணற்றில் ஷெல்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், நீதிமன்ற அனுமதியுடன் ஷெல்களை அகற்றி பாதுகாப்பாக செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.