மண்சரிவில் சிக்கி காணாமல்போன 17 வயது சிறுமி, சடலமாக மீட்பு!

இரத்தினபுரி – தும்பர, இஹலபொல பகுதியில் மண்சரிவில் சிக்கி காணாமல்போன 17 வயது சிறுமி, சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இத்தகவலை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மண்சரிவில் சிக்கி காணாமல்போன ஏனையவரை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மண்சரிவில் காயமடைந்த குறித்த சிறுமியின் தாய், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் கூறப்படுகின்றது.