வவுனியாவில் வீதிகளில் நடமாடியோர் மற்றும் வங்கிகள் ஊழியர்கள் உட்பட 70 பேருக்கு பிசீஆர் பரிசோதனை!

வவுனியாவில் கிராமப் பகுதிகளில் வீதிகளில் நடமாடியோர் மற்றும் வங்கி ஊழியர்கள் உட்பட 70க்கு மேறபட்டவர்களுக்கு சுகாதார பிரிவினரினால் இன்று (04.06.2021) காலை பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் தினந்தோறும் 130 பிசீஆர் முடிவுகள் 24 மணிநேரத்தில் வழங்க சுகாதாரப் பிரிவினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில்,

வவுனியா சகாயாமாதாபுரம், மாமடு பகுதி கிராம மக்கள், வீதிகளில் அநாவசியமான முறையில் நடமாடியோர், வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் ஊழியர்கள் என 70க்கு மேற்பட்டவர்களுக்கு எழுமாறாக பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான பி.சி.ஆர் பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.