தலவாக்கலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா

தலவாக்கலை – கட்டுக்கலை தோட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை இதனை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து குறித்த 13 பேருடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த பணிமனை மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் அந்த பகுதியில் மேலும் 11 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.