உயிரிழந்த நபரின் சடலத்தை கட்டிப்பிடித்த 13 பேருக்கு கோவிட் தொற்று!

ஹட்டன், தலவாக்கலை பிரதேசத்தில் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே கும்பத்தை சேர்ந்த 13 பேரே இவ்வாறு கோவிட் தொற்றுக்குள்ளானதாக கொட்டகல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னர் உறவினர்கள் சடலத்தை கட்டிபிடித்து அழுது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

எனினும் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னரே அவர் கோவிட் தொற்றுக்குள்ளாகியிருந்தார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.