யாழ்.பருத்தித்துறை, உடுவில் மாத்திரம் 6 சிறுவர்கள் உட்பட 32 பேருக்கு கொரோனா உறுதி!

யாழ்.பருத்தித்துறை மற்றும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மட்டும் சுமார் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

இதன்படி பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 03 சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர். மேலும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்றையதினம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழத்தின் கொரோனா ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேர் இனம் காணப்பட்ட நிலையில் 02, 02, 13 வயதுகளை உடைய சிறுவர்கள் 03 பேர் உள்ளடங்குகின்றனர்.