மொரட்டுவ பல்கலைகழக மாணவன் ஒருவரின் சடலம் தீயில் எரிந்த நிலையில் மீட்பு!

பல்கலைகழக மாணவன் ஒருவரின் சடலம் தீயில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொரட்டுவ, சொய்சாபுரவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குறித்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு சொய்சாபுரவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3வது மாடியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து மொரட்டுவ நகரசபை தீயணைப்பு பிரிவின் உதவியுடள் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன் , தீயில் எரிந்த நிலையில் பல்கலைகழக மாணவனின் சடலத்தை மீட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த பல்கலைகழக மாணவன் தீ மூட்டி தற்கொலை செய்ய முயன்றபோது, தீ விபத்து ஏற்பட்டிருக்கலாமென பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.