யாழ்.ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் 40 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை விடுதி!

யாழ்.ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் சுமார் 40 படுககைகளுடன் கூடிய கெரோனா நோயாளர்களுக்கான விடுதி தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் குறித்த விடுதிகளுக்கான கொரோனா நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுப்பப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆயினும் குறித்த விடுதி பொது நோயாளர்கள் மற்றும் சிறுவர் விடுதி என்பவற்றின் அருகில் காணப்படுவதால் ஒருவித அச்சநிலை காணப்படுகின்றது.

தற்போதய அதிகரித்த கொரோனா பரவலை கருத்தில் கொண்டே குறித்த விடுதிகள் தயார் படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.