யாழில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு!

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

யாழில் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக உடுவில் பிரதேச செயலர் பிரிவில் இரண்டு கிராம அலுவலர் பிரிவுகள் ஜே 189, 190 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் ஒரு சில பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது