யாழ் பருத்தித்துறை பிரதான வீதியில் உள்ள வல்லை பாலத்தில் பாய்ந்தது வாகனம்!

சீரற்ற வானிலையுடன் கூடிய மழை காரணமாக யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியில் உள்ள வல்லை பாலத்தில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருகின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த ஹப் வாகனம் பாலத்தில் ஏற்பட்ட சறுக்கல் தன்மை காரணமாக கடல் நீரேரிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நெடுங்கேணி பகுதியில் இருந்து பருத்தித்துறைக்கு வெங்காயம் ஏற்றுவதற்கு வந்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. வாகனத்தை செலுத்திச் சென்ற சாரதியான ஒலுமடு நெடுங்கேணி பகுதியினை சேர்ந்த செல்வசந்திரன் ரகுநேசன் காயமடைந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பகுதியில் மழை காலத்தில் நீண்ட நாட்களாக தொடர்ச்சியான விபத்து சம்பவங்கள் இடம்பெறுகின்ற நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஆளுகைக்குட்பட்ட குறித்த பாலத்திற்கு அண்மையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.