டுபாய் சீட்டிழுப்பில் 81 கோடி வென்ற இலங்கையர்!

டுபாயில் கடமையாற்றிவரும் இலங்கையர் ஒருவர், 15 மில்லியன் டிராம் பணப் பரிசை வெற்றிக் கொண்டுள்ளார்.

டுபாயில் கடந்த 16 வருடங்களாக பொறியியலாளராக கடமையாற்றிவரும் ஜே.டி.எஸ்.ரசிக்க என்பவருக்கே, இந்த முதல் பரிசு கிடைத்துள்ளது.

இந்த சீட்டிழுப்பு கடந்த 3ம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அது இலங்கை பெறுமதியில் சுமார் 81 கோடி ரூபா என கூறப்படுகின்றது.

அபுதாபி பிக் டிக்கட் என்ற சீட்டிழுப்பிலேயே அவர் இந்த தொகை வெற்றிக் கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேபோன்று, 60 ஆயிரம் டிராம் பணப் பரிசை, மற்றுமொரு இலங்கை பிரஜை வெற்றிக் கொண்டுள்ளார். இந்த சீட்டிழுப்பில் 7வது வெற்றியாளராக சுலேந்திரன் ரஜேந்திரன் என்ற தமிழர் ஒருவரே தெரிவாகியுள்ளார்.

அவர் இலங்கை பெறுமதியில் சுமார் 3 கோடி ரூபா வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு முதல் பரிசை வெற்றிக் கொண்டவர்கள், குறித்த டிக்கட்டை தனது 8 நண்பர்களுடன் இணைந்தே கொள்வனவு செய்துள்ளதாகவும், அந்த வெற்றி பணத்தை 8 பேரும் பகிர்ந்துக்கொள்ளவுள்ளதாகவும் தெரியவருகின்றது.